பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பல்துறை வளர்ச்சித் திட்டத்தை சீரமைத்து, பிரதான் மந்திரி ஜன விகாஸ் காரியகிரம் என்று பெயரிடுவதற்கான முன்மொழிவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும் இக்குழு, இத்திட்டம் 14-வது நிதிக் குழுவின் மீதமிருக்கும் காலம் முழுமையும் தொடர்வதற்கும் அனுமதியளித்துள்ளது.
இத்திட்டம் அடையாளம் காணப்பட்ட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள வளர்ச்சிக் குறைபாடுகளை களைய எண்ணுகிறது.
மேலும் இத்திட்டம், அதில் கூறியுள்ள வரையறைகளைப் பொறுத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களினால் அடையாளம் காட்டப்படும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலும் அமல்படுத்தப்படும்.
பல்துறை வளர்ச்சித் திட்டம் 2008-2009-ஆம் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25 சதவிகித சிறுபான்மையின மக்களைக் கொண்டுள்ள அடையாளம் காணப்பட்டுள்ள சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 90 மாவட்டங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான சொத்துக்களையும் அடிப்படை வசதிகளையும் உருவாக்கும் எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.