2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள சுமார் 1.7 கோடி விவசாயிகளுக்கு மிகவும் நன்கு பயனளிக்கும் நோக்கில் பிரதான் மந்திரி தன்-தான்ய கிருஷி யோஜனா திட்டமானது தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது, வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப் படுத்தலை ஊக்குவித்தல், பஞ்சாயத்து மற்றும் தொகுதி மட்டங்களில் அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது நீர்ப்பாசன உள்கட்டமைப்பினை மேம்படுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கு மிக குறுகிய மற்றும் நீண்ட கால கடன் கிடைக்கப் பெறும் நிலையினை அதிகரிக்கும்.
கூடுதலாக, இந்தப் பிராந்தியத்தில் விவசாயிகளை ஆதரிப்பதற்காக பீகாரில் ஒரு மக்கானா (தாமரை விதை) வாரியமும் நிறுவப்பட்டுள்ளது.