பிரதான் மந்திரி நுண் உணவுப் பதப்படுத்தலின் ஒழுங்குமுறை
July 3 , 2020 1609 days 643 0
மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழிற்துறை (FPI - Food Processing Industries) அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்படும் பிரதான் மந்திரி நுண் உணவுப் பதப்படுத்தல் ஒழுங்குமுறைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டமானது 2024-25 வரை 5 ஆண்டுக் காலத்திற்கு செயல்படுத்தப்பட இருக்கின்றது.
இது அகில இந்திய அளவில் அமைப்புசாரா துறைக்கான ஒரு திட்டமாகும்.
இதற்கான செலவினமானது இந்திய அரசு மற்றும் மாநிலங்களிடையே முறையே 60 : 40 என்ற அளவில் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது.
இந்த திட்டத்திற்காக “ஒரு மாவட்டம் ஒரு பொருள்” என்ற அணுகுமுறையானது ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றது.
இந்த அணுகுமுறையின் கீழ், மாநிலங்கள் தற்பொழுது இருக்கும் மூலப் பொருட்களின் அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கான உணவுப் பொருளை (சிறப்புமிக்க (அ) விரைவில் அழியக் கூடிய (அ) தானியம்) அடையாளம் காண இருக்கின்றன.
பசுமை நடவடிக்கைத் திட்டமானது மாம்பழம், வாழைப்பழம், கொய்யப்பழம், கிவி, லிச்சி, பப்பாளி, நாரத்தை, அன்னாட்சி, மாதுளை, பலா ஆகிய 10 பழ வகைகளுக்கும் பிரெஞ்சு பீன்ஸ், பாகற்காய், கத்தரி, மிளகுச்செடி, கேரட், காளிபிளவர், பச்சை மிளகாய், ஒக்ரா ஆகிய 8 காய்கறி வகைகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளது.