இந்த் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
இது நீலப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டமாகும்.
இது அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு, அதாவது 2020-21 நிதியாண்டிலிருந்து 2024-25 ஆம் நிதியாண்டு வரையிலான காலத்திற்குச் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
மத்திய மீன்வள, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை அமைச்சகமானது இதனைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.
இது மத்திய அரசுத் திட்டம் (CS - Central Sector Scheme) மற்றும் மத்திய அரசினால் ஆதரிக்கப்படும் திட்டம் (CSS - Centrally Sponsored Scheme) ஆகிய 2 கூறுகளின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
மத்திய அரசுத் திட்டம் (CS) – முழுத் திட்டத்திற்கான செலவும் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் (100% மத்திய அரசு நிதியுதவி).
CSS கூறானது பயனாளியைச் சாராத மற்றும் பயனாளியைச் சார்ந்த என்ற 2 துணைக் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், முழுத் திட்டத்திற்கான செலவினமும் மத்திய மற்றும் மாநில அரசினால் பயனாளியைச் சாராத துணைக் கூறின் அடிப்படையில் பின்வருமாறு பகிர்நது கொள்ளப்படுகின்றது.
வட கிழக்கு மற்றும் இமயமலை மாநிலங்கள் - 90% மத்திய அரசினாலும் 10% மாநில அரசினாலும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
இதர மாநிலங்கள் - 60% மத்திய அரசினாலும் 40% மாநில அரசினாலும் பகிர்ந்து கொள்ளப் படுகின்றது.
ஒன்றியப் பிரதேசங்கள் (சட்டமன்றம் கொண்டுள்ளவை மற்றும் சட்டமன்றம் இல்லாதவை) - 100% நிதி மத்திய அரசினால் அளிக்கப்படுகின்றது.