பிரதமர் டிஜிட்டல் முறையில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா மற்றும் இ-கோபாலா செயலி ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வைத்தார்.
பீகாரில் சீதாமாரியில் மீன் அடைகாக்கும் வங்கி, கிஷன்கஞ்சில் நீர்வாழ்வு நோய்கள் பரிந்துரை ஆய்வகம் (Aquatic Disease Referral) ஆகியவற்றை நிறுவுவதையும் அவர் அறிவித்தார்.
நோக்கங்கள்
இந்தியாவில் மீன்வளத்தின் நிலையான வளர்ச்சி.
2024-25 ஆண்டு வாக்கில் மீன் உற்பத்தியை 70 லட்சம் டன்னாக உயர்த்துதல்.
மீன்வளத் துறையில் மீன்பிடித்தலுக்குப் பிந்தைய இழப்புகளை 10% ஆகக் குறைத்தல்
இ-கோபாலா செயலி
இது மீன்வளர்ப்போரின் நேரடி பயன்பாட்டிற்கான இன மேம்பாட்டுச் சந்தை மற்றும் தகவல் தளம் போன்றவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது மீன் வளர்ப்போர் கால்நடைகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க உதவும்.
இந்தச் செயலியின் மூலம் அவர்கள் நோய் இல்லாத ஜெர்ம் பிளாசத்தை (germplasm – முளைமக் கூழ்) வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
மேலும், கால்நடைகளுக்கான முதலுதவி, செயற்கைக் கருவூட்டல் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றிற்கான தரமான இனப்பெருக்கச் சேவைகள் கிடைக்குமா என்பதையும் இவர்கள் அறியலாம்.