2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட மூத்தக் குடிமக்களின் நலனுக்காகவும் முதியோர்களின் வருமான உத்தரவாதத்திற்கான பாதுகாப்பைச் செயல்படுத்தவும் பயன்படும் ஒரு பிரத்தியேகமான ஓய்வூதியத் திட்டமாகும்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் ஒருவர் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம்.
இதன் காலவரையறை 10 ஆண்டுகளாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு இந்த திட்டத்தை இயக்குவதற்கான சிறப்புரிமை வழங்கப் பட்டுள்ளது.