பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana-PMVVY) திட்டத்தின் கீழ் முதலீட்டு வரம்பை (investment limit) 7.5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக அதிகரிக்க பிரதமர் தலைமையிலான மத்திய கேபினேட் குழுவானது அனுமதி வழங்கி உள்ளது.
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டமானது வயதான காலத்தின் போது சமூகப் பாதுகாப்பினை வழங்குவது (social security), 60 வயது மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்களைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுக்காக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (e Insurance Corp -LIC) மூலம் அமல்படுத்தப்படுகின்றது.
நிச்சயமற்ற சந்தை நிலைமைகள் காரணமாக வட்டி வீதத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் சரிவுகளிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா திட்டமானது 10 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 8 சதவீதம் எனும் அளவிலான உத்திரவாதமுடைய வருமான அளவின் அடிப்படையில் (guaranteed rate of return of 8 percent) உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியத்தை பயனாளிகளுக்கு வழங்குகின்றது.