மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “LPG பஞ்சாயத்து” எனும் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு லட்சம் LPG பஞ்சாயத்துகளை இந்தியா முழுவதும் உண்டாக்குவதே இதன் நோக்கமாகும்.
இதன்படி நாட்டின் முதல் LPG பஞ்சாயத்தினை குஜராத்தில் இந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது.
LPG பஞ்சாயத்து- ஓர் எரிபொருள் நிறுவன அலுவலர்கள் மற்றும் கிராமத்தவர்களுக்கிடையேயான LPG பயன்பாடு மற்றும் அவை சார் விழிப்புணர்வுகள் பற்றிய தொடர்பு மேடையாகும்.
இவற்றில்,
LPG பயன்படுத்துதலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
LPG பயன்பாட்டால் உண்டாகும் சுற்றுச்சூழல் நன்மைகள் , சுகாதாரம் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தில் LPG ன் விளைவுகள் பற்றி கிராமப்புற LPG பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்படும்.