சூரியன் எனப் பொருள்படும் உயர் செயல்திறன் கணிமை சாதனமான (High Performance Computing Facility - HPC) பிரதியுஷ் அதிவேகக் கணினியை புனேவில் உள்ள வெப்ப மண்டல வானியல் இந்திய ஆய்வு நிறுவனத்தில் (Indian Institute of Tropical Meteorology -IITM) இந்தியா நிறுவியுள்ளது.
8 பெடாபிளாப்புகள் (Petaflops) எனும் அளவிலான உச்ச சக்தியுடைய கணிமை வேகத்தை (Computing Speed) பிரதியுஷ் கணினி வரிசைகள் தரவல்லன.
பெடாபிளாப்புகள் என்பவை கணினிகளின் கணிமை வேகத்தின் (Computing Speed) அலகாகும்.
இந்தியாவின் பிரதியுஷ் ஆனது ஜப்பான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு அடுத்து வானிலை மற்றும் பருவ நிலை ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் நான்காவது அதிவேக சூப்பர் கணினி ஆகும்.
இந்தப் புதிய கணிமை அமைப்பின் மூலம் 3 கி.மீ தெளிவுத் திறனில் (Resolution) இந்தியப் பகுதிகளையும் 12 கி.மீ தெளிவுத்திறனில் உலகையும் வரைபடமிடல் என்பது சாத்தியமாகும்.
சர்வதேச அளவில் செயல்படும் அதிவேக கணினிகளின் பட்டியலில் முன்னணி 500 இடங்களில் 300 ஆவது இடத்திலுள்ள இந்திய அதிவேக கணினிகள், பிரதியுஷ் வருகையின் மூலம் முதல் 30 இடத்துக்கு முன்னேறும்.
இந்த இயந்திரம் இரு இந்திய நிறுவனங்களில்
0 பெடா பிளாப்புகளுடைய HPC வசதி உள்ள புனேவின் IITM நிறுவனத்திலும்,
பெடா பிளாப்புகளுடைய HPC வசதி உள்ள நொய்டாவின் மத்திய வரம்புடைய வானிலை முன்னறிவிப்பு தேசிய மையத்திலும் (National Centre for Medium Range Weather Forecast)