TNPSC Thervupettagam

பிரபஞ்சத்தின் விரிவாக்கம் 2023

January 5 , 2024 197 days 293 0
  • யூக்ளிட் தொலைநோக்கி பெர்சியஸ் விண்மீன் திரள் மற்றும் பிறவற்றைச் சேர்ந்த அண்டங்கள் மேலும் விலகிச் செல்வதைக் கண்டறிந்துள்ளது.
  • இது பிரபஞ்சம் விரிவடைவதைக் காட்டுகிறது.
  • பிரபஞ்சத்தின் விரிவாக்கம் ஆனது அண்டங்களை ஒன்றிலிருந்து ஒன்று நகர்த்தச் செய்கிறது.
  • ஒரு அண்டத்தின் வேகத்திற்கும் தூரத்திற்கும் இடையிலான தொடர்பு “ஹப்பிள் மாறிலி” மூலம் மதிப்பிடப் படுகிற நிலையில் இது 43 மைல்கள் (70 கிமீ) / வினாடி / மெகாபார்செக் ஆகும்.
  • பெர்சியஸ் என்பது பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப் பெரியக் கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
  • இது பூமியிலிருந்து ‘வெறும்’ 240 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து உள்ளதோடு இது ஆயிரக்கணக்கான அண்டங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்