யூக்ளிட் தொலைநோக்கி பெர்சியஸ் விண்மீன் திரள் மற்றும் பிறவற்றைச் சேர்ந்த அண்டங்கள் மேலும் விலகிச் செல்வதைக் கண்டறிந்துள்ளது.
இது பிரபஞ்சம் விரிவடைவதைக் காட்டுகிறது.
பிரபஞ்சத்தின் விரிவாக்கம் ஆனது அண்டங்களை ஒன்றிலிருந்து ஒன்று நகர்த்தச் செய்கிறது.
ஒரு அண்டத்தின் வேகத்திற்கும் தூரத்திற்கும் இடையிலான தொடர்பு “ஹப்பிள் மாறிலி” மூலம் மதிப்பிடப் படுகிற நிலையில் இது 43 மைல்கள் (70 கிமீ) / வினாடி / மெகாபார்செக் ஆகும்.
பெர்சியஸ் என்பது பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப் பெரியக் கட்டமைப்புகளில் ஒன்றாகும்.
இது பூமியிலிருந்து ‘வெறும்’ 240 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்து உள்ளதோடு இது ஆயிரக்கணக்கான அண்டங்களைக் கொண்டுள்ளது.