TNPSC Thervupettagam

பிரபஞ்சத்தில் (பேரண்டத்தில்) மிகப்பெரிய வெடிப்பு

March 2 , 2020 1732 days 588 0
  • எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பெரு வெடிப்பிற்குப் பிறகு பிரபஞ்சத்தில் காணப்பட்ட மிகப்பெரிய வெடிப்பை வானியலாளர்களைக் கொண்ட சர்வதேச குழுவானது கண்டுபிடித்துள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்பிற்காக 3 தொலைநோக்கிகள் பயன்படுத்தப் பட்டன.
  • அவையாவன:
    • NASAவின் (தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் - National Aeronautics and Space Administration) சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம்
    • ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA - European Space Agency) எக்ஸ்எம்எம் - நியூட்டன் மற்றும்
    • மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள முர்ச்சீசன் வைட்ஃபீல்ட் அரே (MWA - Murchison Widefield Array) ஆய்வகம்.
  • பூமியிலிருந்து 390 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஓபியுச்சஸ் விண்மீன்த் திரள் குழுவில் (Ophiuchus galaxy cluster) இந்த வெடிப்பு நிகழ்ந்தது.
  • இந்த வெடிப்பின் ஆற்றலானது விண்மீன் தொகுப்பில் உள்ள வெப்பமான வாயுக்களைக் கொண்ட பிளாஸ்மாவில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்