எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ தொலைநோக்கிகளைப் பயன்படுத்திப் பெரு வெடிப்பிற்குப் பிறகு பிரபஞ்சத்தில் காணப்பட்ட மிகப்பெரிய வெடிப்பை வானியலாளர்களைக் கொண்ட சர்வதேச குழுவானது கண்டுபிடித்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பிற்காக 3 தொலைநோக்கிகள் பயன்படுத்தப் பட்டன.
அவையாவன:
NASAவின் (தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் - National Aeronautics and Space Administration) சந்திரா எக்ஸ்ரே ஆய்வகம்
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA - European Space Agency) எக்ஸ்எம்எம் - நியூட்டன் மற்றும்
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள முர்ச்சீசன் வைட்ஃபீல்ட் அரே (MWA - Murchison Widefield Array) ஆய்வகம்.
பூமியிலிருந்து 390 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஓபியுச்சஸ் விண்மீன்த் திரள் குழுவில் (Ophiuchus galaxy cluster) இந்த வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த வெடிப்பின் ஆற்றலானது விண்மீன் தொகுப்பில் உள்ள வெப்பமான வாயுக்களைக் கொண்ட பிளாஸ்மாவில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது.