TNPSC Thervupettagam

பிரமான் மந்திரி மஹிளா சக்தி கேந்திரா

November 25 , 2017 2585 days 2591 0
  • பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பிரதான் மந்திரி மஹிலா சக்தி கேந்திரா எனும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • சமுதாய பங்கேற்பின் மூலம் ஊரக பெண்களுக்கு அதிகாரமளித்து அதன் மூலம் அவர்கள் தங்களின் முழு ஆற்றலை உணர்வதற்கான சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • 2017-18 முதல் 2019-20 வரையிலான ஆண்டு காலத்திற்கு ”பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல்” திட்டத்தின் கீழ் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டமானது தேசிய, மாநில, மண்டல அளவில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • பல்வேறு நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் பாலின விகிதம் (Child Sex Ratio),புதிதாக பிறந்த பெண் குழந்தைகளின் உயிர் வாழ்தல், பெண்கள் கல்வி மற்றும் மேம்பாடு போன்றவற்றை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்ளாகும்.
  • இத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய மாவட்டங்களில் மண்டல அளவில் தன்னார்வ மாணவர்களின் ஈடுபாட்டின் மூலம் சமுதாய பங்கேற்பு (Community participation) மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்