திபெத் வழியே பாயும் பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய அணையினைக் கட்டுவதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.
இது புவியின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமாகக் கூறப்படுகிறது.
இந்த நீர்மின் நிலையம் ஆனது, பிரம்மபுத்திரா நதியின் திபெத்திய பெயரான யார்லுங் சாங்போ ஆற்றின் நீர் போக்கின் கீழ் மட்டப் பகுதியில் அமைக்கப் படுவதற்கு என திட்டமிடப் பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் திபெத்தில் 1.5 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்ட ஜாம் நீர்மின் நிலையத்தினை சீனா ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது.
பிரம்மபுத்திரா நதியானது, திபெத்தியப் பீடபூமியின் குறுக்கே பாய்கிறது என்ற ஒரு நிலையில் பூமியின் மிக ஆழமான பள்ளத்தாக்கை உருவாக்குகின்ற இந்த நதியானது இந்தியாவை அடைவதற்கு முன்னதாக 25,154 அடி வரையிலான ஆழ வித்தியாசத்தைக் கொண்டுள்ளது.