இந்தியாவானது நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான புதிய பிரம்மோஸ் ஏவுகணையை அந்தமான் தீவில் சோதனை செய்துள்ளது.
இது நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் மீயொலி வேக ஏவுகணையாகும்.
இந்த ஏவுகணையின் வரம்பானது முந்தைய 290 கிலோ மீட்டரிலிருந்து 400 கிலோ மீட்டர் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
இதன் வேகமானது 2.8 மாக் அல்லது ஒலியின் மூன்று மடங்கு வேகம் என்ற அளவில் பராமரிக்கப் படுகின்றது.
பிரம்மோஸ் II ஏவுகணையானது மாக் 7-8 என்ற வேகத்துடன் தற்போது மேம்பாட்டு நிலையின் கீழ் உள்ளது.
2016 ஆம் ஆண்டில் ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா உறுப்பினர் ஆன பின்பு, 800 கிலோ மீட்டர் வரம்பு கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையின் புதிய பதிப்பை கட்டமைக்க வேண்டி ரஷ்யாவானது இந்தியாவுடன் இணைய இருக்கின்றது.
பிரம்மோஸ் ஏவுகணையின் பெயரானது இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மாஸ்கோ ஆகிய 2 நதிகளிலிருந்து எடுக்கப் பட்டுள்ளது.
உலகில் உள்ள விரைவான கப்பல் எதிர்ப்பு ஏவுகணை இதுவாகும்.
இந்த ஏவுகணையை கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றிலிருந்து ஏவ முடியும்.