TNPSC Thervupettagam
October 28 , 2020 1400 days 520 0
  • மீயொலி வேக ஏவுகணையான “பிரம்மோஸ் ஆனது ஐஎன்எஸ் சென்னை என்ற ஒரு கப்பலில் இருந்து சோதித்துப் பார்க்கப்பட்டது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது ஐஎன்எஸ் சென்னையிலிருந்து பிரம்மோஸ் ஏவுகணையின் புதிய கடற்படைப் பதிப்பைச் சோதித்துப் பார்த்துள்ளது.
  • ஐஎன்எஸ் கப்பல் ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு மறைந்திருந்து தாக்கும் வகை கப்பலாகும்.
  • பிரம்மோஸ் ஆனது அரபிக் கடலில் ஒரு இலக்கைத் தாக்கியது.
  • இது நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கைக் தாக்கி அழிக்கும் ஒரு மீயொலி வேக ஏவுகணையாகும்.
  • மீயொலி வேக ஏவுகணைகள் 2 முதல் 3 மாக் வேகத்தில் பயணம் செய்யும் திறன் கொண்டது.
  • இது இந்தியா மற்றும் ரஷ்யாவினால் இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்