இந்தியக் கடற்படையானது அந்தமான் நிக்கோபர் தீவுப் பகுதியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான பிரம்மோஸ் மீயொலி வேக ஏவுகணைப் பதிப்பை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்தது.
இதற்கு முன்பு இந்த ஏவுகணையின் நிலத்திலிருந்துத் தாக்கும் வகையிலான பதிப்பானது அந்தமான் நிக்கோபர் தீவுப் பகுதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டது.
இந்த வகுப்பைச் சேர்ந்த உலகின் மிக விரைவானச் செயல்பாட்டு ஏவுகணை அமைப்பு இதுவாகும்.
இதனை நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானம் மற்றும் நிலம் போன்றவற்றிலிருந்துச் செலுத்த முடியும்.
பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பானது தற்பொழுது 400 கிலோ மீட்டருக்கு மேலாக மேம்படுத்தப் பட்டுள்ளது.