வருடாந்திர ஆசியான்-இந்திய பாரதிய திவாஸ் (ASEAN – India Pravasi Bharathiya Divas) அண்மையில் சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டது.
2018-ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சியின் கருத்துரு Þ “பண்டைய வழித்தடம், புதிய பயணம்; ஆற்றல் வாய்ந்த ஆசியான் – இந்தியா கூட்டிணைவிலுள்ள புலம் பெயர்ந்தோர்“ (Ancient Route, New Journey; Diaspora in the Dynamic ASEAN – India Partnership)
இந்தியாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆற்றும் பங்கை முன்னெடுத்துக் காட்டுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 9ஆம் தேதி பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தியவரும், இந்தியர்களின் வாழ்வை மாற்றியமைத்தவருமான மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று தான் இந்தியாவிற்கு திரும்பினார். அந்த வரலாற்று நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 9ல் பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகின்றது.
மேலும் இந்தியா-ஆசியான் நாடுகளின் கூட்டிணைவின் 25-வது வருடமான இவ்வாண்டோடு ஒருங்கே அமையும் வகையில் இந்நிகழ்வும் நேரிட்டுள்ளது.