நடிகரும் தடகள வீரருமான பிரவீன் குமார் சோப்தி காலமானார்.
"மகாபாரத்" என்ற தொலைக்காட்சி தொடரில் பீமன் கதாபாத்திரத்தில் நடித்தற்காகவும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காகவும் அவர் மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.
அவர் சம்மட்டி மற்றும் வட்டு எறிதல் போன்ற பல்வேறு தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளார்.
1966 மற்றும் 1970 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட நான்கு பதக்கங்களை அவர் வென்றார்.
பிரவீன் குமார் சோப்தி 1966 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில், சம்மட்டி எறிதலில் (Hammer Throw) வெள்ளிப் பதக்கம் வென்றார்.