பிரஸ்டன் வளைவு என்பது ஒரு நாட்டில் ஆயுட்காலம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றுக்கு இடையே காணப்படும் ஒரு குறிப்பிட்ட செயலறிவுத் தொடர்பினைக் குறிக்கிறது.
இது முதன்முதலில் அமெரிக்க சமூகவியலாளர் சாமுவேல் H. பிரஸ்டன் என்பவரால் 1975 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது.
அவர் "The changing relation between mortality and level of economic development" என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை எழுதினார்.
ஏழ்மையான நாடுகளில் வாழும் மக்களுடன் ஒப்பிடும் போது, செல்வ வளம் மிக்க நாடுகளில் வாழும் மக்கள் பொதுவாக நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதை அவர் கண்டறிந்தார்.
செல்வ வளம் மிக்க நாடுகளில் உள்ள மக்கள் சிறந்த மருத்துவ வசதி, சிறந்த கல்வியறிவு, தூய்மையான சூழலில் வாழ்வது, சிறந்த ஊட்டச்சத்தினைப் பெறுவது போன்றவற்றால் இது சாத்தியமாக உள்ளது.
1947 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு சுமார் 9,000 ரூபாயாக இருந்த இந்தியர்களின் சராசரி தனிநபர் வருமானம் ஆனது 2011 ஆம் ஆண்டில் ஆண்டிற்கு 55,000 ரூபாயாக உயர்ந்தது.
அதே காலகட்டத்தில், இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் ஆனது வெறும் 32 வயதில் இருந்து 66 வயதுக்கு மேல் ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், தனிநபர் வருமானம் மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றுக்கு இடையேயான நேர்மறையான தொடர்பு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குப் பிறகு கிடைமட்டமாக நீள்கிறது.