பிராந்திய உறவுகளை ஆழப்படுத்தும் புதிய முத்தரப்பு ஒப்பந்தம்
April 30 , 2023
577 days
231
- இந்தியா, ஆர்மீனியா மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான முதல் முத்தரப்பு ஆலோசனை ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவனில் நடந்தது.
- இங்கு அவர்கள் சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித்தடம் (INSTC) குறித்து விவாதம் நடத்தினர்.
- இது இந்தியா, ஈரான் மற்றும் ரஷ்யாவை இணைக்கும் சரக்கு வழித் தடமாகும்.
- INSTCயின் முக்கியக் குறிக்கோள் மும்பையிலிருந்து மாஸ்கோவிற்குச் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான நேரத்தையும் செலவையும் குறைப்பது ஆகும்.
- INSTC ஒப்பந்தம் முதலில் ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியா ஆகியவற்றால் 2002 ஆம் ஆண்டில் கையெழுத்தாகி, பின்னர் அது விரிவாக்கப்பட்டது.
Post Views:
231