TNPSC Thervupettagam

பிரான்சு நாட்டுடனான 25 வருட உத்திசார் கூட்டாண்மை

July 17 , 2023 372 days 219 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் பாஸ்டில் தினம் (சிறைத் தகர்ப்பு) மீதான  கொண்டாட்டங்களுக்கான ஒரு கெளரவ விருந்தினராக பிரான்சு நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.
  • இந்த பயணமானது, பிரான்சு மற்றும் இந்தியா இடையேயான உத்திசார் கூட்டுறவின் 25வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
  • 1998 ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனைகளுக்குப் பிறகு இந்தியாவின் உத்திசார் முக்கியத்துவத்தை அங்கீகரித்த முதல் நாடு பிரான்சு ஆகும்.
  • 2021-22 ஆம் ஆண்டில் 12.42 பில்லியன் டாலர் மதிப்பிலான வருடாந்திர வர்த்தகத்துடன் இந்தியாவின் முக்கிய வர்த்தகப் பங்குதார நாடாக பிரான்சு மாறியுள்ளது.
  • இந்திய நாட்டினுள் முதலீடு செய்யப்படும் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் சுமார் 1.7 சதவீதத்தினைக் கொண்டுள்ளதால் பிரான்சு நாடானது இந்தியாவின் 11வது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக உள்ளது.
  • 2017-2021 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவிற்கு அதிகளவில் பாதுகாப்பு ஆயுதங்களை விநியோகிக்கும் இரண்டாவது நாடாக பிரான்சு உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில், இந்த இரு நாட்டுத் தலைவர்களும் “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா-பிரான்சு கூட்டுறவு தொடர்பான ஒரு கூட்டு உத்தி சார் திட்டத்தினை” வரவேற்றனர்.
  • பிரெஞ்சு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், 2005 ஆம் ஆண்டின் தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளன.
  • இந்திய விமானப் படையானது 36 ரஃபேல் ரக போர் விமானங்களை கொள்முதல் செய்துள்ளன.
  • குஜராத்தின் வதோதரா எனுமிடத்தில்  C-295 என்ற போர்த்திறம் சார்ந்த போக்குவரத்து விமானங்களைத் தயாரிப்பதற்காக டாடா குழுமம் ஆனது ஏர்பஸ் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்