மின்சாரத் துறை அமைச்சகம் பிராப்தி என்ற இணைய வாயிலையும் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பிராப்தியின் விரிவாக்கம் Payment ratification and Analysis in Power procurement for Bringing Transparency in Invoicing of Agreement (PRAPPTI) என்பதாகும்.
விநியோகஸ்தர்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கும் இடையே மின்சார கொள்முதல் நடவடிக்கைகளில் ஒரு சீரிய திறந்தவெளித் தன்மையை ஏற்படுத்த இது முயல்கின்றது.
இந்த செயலி மின் விநியோக நிறுவனங்கள் எவ்வளவு கட்டண விகிதத்தில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கின்றன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவும் செய்யும்.