TNPSC Thervupettagam

பிராமணர் அல்லாத அர்ச்சகர்

July 17 , 2020 1650 days 721 0
  • மதுரையைச் சேர்ந்த P. தியாகராஜன் என்பவர் தமிழ்நாட்டின் இரண்டாவது பிராமணர் அல்லாத அர்ச்சகராக உருவெடுத்துள்ளார்.
  • இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இக்கோயிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருகின்றது.
  • மதுரையைச் சேர்ந்த T. மாரிச்சாமி என்பவர் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தளக்குளத்தில் உள்ள அய்யப்பன் கோயிலில் நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது பிராமணர் அல்லாத அர்ச்சகராக உருவெடுத்துள்ளார்.
  • 1925 ஆம் ஆண்டில் முதலாவது நீதிக் கட்சி அரசினால் இயற்றப்பட்ட மதராஸ் இந்து சமய அறநிலையைச் சட்டமானது பல்வேறு இந்துக் கோயில்களை மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
  • அதன் பிறகு 1982 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரான எம்.ஜி. இராமசந்திரன் அவர்கள் கோயில் நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நீதியரசர் மகாராஜன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார்.
  • 2006 ஆம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசானது இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோவில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்