ஆஸ்திரேலியா அரசானது பெருந்தடுப்புப் பவளப்பாறைகளைக் (Great Barrier Reef) கொறித்து வாழும் உயிரினமான பெரிய எலி போன்ற உயிரினமான பிராம்பிள் கே மெலோமைஸ் என்ற இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. மனித இனத்தால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றத்தால் அழிந்து போன முதலாவது பாலூட்டியாக இது ஆகியுள்ளது.
எலி போன்ற உயிரினமான பிராம்பிள் கே மெலோமைஸ் கடந்த பத்து வருடங்களில் அப்பகுதியில் காணப்படவில்லை.
இந்த பெருந்தடுப்புப் பவளப் பாறைகளைக் கொறித்து வாழும் உயிரினமானது பப்புவா நியூ கினியாவின் கடற்கரையோரத்தில் டோரிஸ் ஜலசந்தியில் உள்ள சிறிய சாண்டி தீவில் தனியாக வாழ்ந்து வந்தது.
2009 ஆம் ஆண்டு முதல் இந்த உயிரினம் இங்கு காணப்படவில்லை.