TNPSC Thervupettagam

பிரிக்ஸ் - இளம் கண்டுபிடிப்பாளர் பரிசு

November 16 , 2019 1717 days 737 0
  • பெங்களூரைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற அறிஞரான ரவி பிரகாஷ் என்பவர் சிறிய மற்றும் குறு கிராமப்புற பால் விவசாயிகளுக்காக மலிவு விலையில் உள்நாட்டு பால் குளிர்வித்தல் அலகைக் கண்டுபிடித்ததற்காக பிரிக்ஸ் அமைப்பின் இளம் கண்டுபிடிப்பாளர் பரிசை வென்றுள்ளார்.
  • நானோ - திரவ அடிப்படையிலான நிலை மாற்றப் பொருட்களைப் பயன்படுத்தி 30 நிமிடங்களுக்குள் மூலப் பாலின் வெப்பநிலையை 37° செல்சியசிலிருந்து  7° செல்சியஸிற்குக் கொண்டு வர முடியும்.
  • 2019 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடைபெற்ற 4வது பிரிக்ஸ் அமைப்பின் இளம் விஞ்ஞானிகள் மன்றத்தில் (ஒய்.எஸ்.எஃப்) இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்