இந்தியா, 5 உறுப்பினர்கள் கொண்டபிரிக்ஸ் அமைப்புக்கென்று தனிப்பட்ட மதிப்பீட்டு நிறுவனத்தை அமைத்திட பிரிக்ஸ் நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
ஐஎம்எப்/உலக வங்கியின் வசந்த கால கூட்டங்களின் ஒரு பகுதியாக பிரிக்ஸ்நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம் நடத்தப்பட்டது.
வளரும் பொருளாதாரச் சந்தைகளில் உள்ள முட்டுக்கட்டைகளை களைந்திட தனிப்பட்ட ஒரு நிறுவனம் பிரிக்ஸ்(பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா) அமைப்புக்கு வேண்டுமென்று முதலில் குரல் கொடுத்தது இந்தியாவே.
தற்சமயம் வளரும் பொருளாதாரச் சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் எஸ்&பி, மூடிஸ் மற்றும் பிட்ச் ஆகியனவாகும்.