இந்த ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் டர்பன் என்ற தென்னாப்பிரிக்கப் பொலிவுமிகு நகரில், இந்த மன்றத்தின் முதல் நேரடித் தொடர் கூட்டமானது நடைபெற்றது.
இது பல்வேறு முக்கிய நகர்ப்புற மேம்பாட்டுப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதோடு, அதிகரித்து வரும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உலக நாடுகளின் நகரங்கள் எவ்வாறு தங்களின் நெகிழ்திறனை நன்கு மேம்படுத்துகின்றன என்பதை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த மன்றத்தின் முந்தைய கூட்டமானது 2022 ஆம் ஆண்டில் சீனாவின் தலைமையின் கீழ் இயங்கலை வாயிலாக நடத்தப்பட்டது.
பிரிக்ஸ் நகரமயமாக்கல் மன்றம் ஆனது, 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புது டெல்லியில் தொடங்கப்பட்டது.