TNPSC Thervupettagam

பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் சீனாவில் சந்திப்பு

July 28 , 2017 2677 days 990 0
  • சந்திப்பு: பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் சந்திப்பு,
  • இடம்: சோங்கிங் (Chongqing) , சீனா.
  • நாள்: 26-27, ஜூலை, 2017.
  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்(சுதந்திர பொறுப்பு) , ஸ்ரீ பண்டார தத்தத்ரேயா தலைமையிலான இந்திய பிரதிநிதிகள், ‘பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் சந்திப்பில்’ பங்குபெற்றனர். இந்த சந்திப்பில் பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் உறுதிமொழி (BRICS Labour and Employment Ministerial Declaration) அனைவராலும்ஏற்றுக்கொள்ளபட்டது.
  • இந்த உறுதிமொழி அனைத்து பிரிக்ஸ் நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளிடையே நிறுவன ரீதியில் கூட்டு வணிகம் மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்த முனைகிறது.
  • உறுதிமொழியின் சில முக்கிய அம்சங்கள் : ‘பிரிக்ஸ்முன்னேற்றத்துக்கானதிறன்கள்’, ‘உலகளாவிய மற்றும் நிலையான சமூக பாதுகாப்பு அமைப்புகள்’, ‘பிரிக்ஸ் தொழிலாளர் ஆராய்ச்சி நிறுவனங்கள்’ , ‘பிரிக்ஸ் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பு’, ‘பிரிக்ஸ்தொழில் முனைவோர் ஆராய்ச்சி’.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்