சந்திப்பு: பிரிக்ஸ் நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் சந்திப்பு,
இடம்: சோங்கிங் (Chongqing) , சீனா.
நாள்: 26-27, ஜூலை, 2017.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்(சுதந்திர பொறுப்பு) , ஸ்ரீ பண்டார தத்தத்ரேயா தலைமையிலான இந்திய பிரதிநிதிகள், ‘பிரிக்ஸ் நாடுகளின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் சந்திப்பில்’ பங்குபெற்றனர். இந்த சந்திப்பில் பிரிக்ஸ் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் உறுதிமொழி (BRICS Labour and Employment Ministerial Declaration) அனைவராலும்ஏற்றுக்கொள்ளபட்டது.
இந்த உறுதிமொழி அனைத்து பிரிக்ஸ் நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளிடையே நிறுவன ரீதியில் கூட்டு வணிகம் மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்த முனைகிறது.
உறுதிமொழியின் சில முக்கிய அம்சங்கள் : ‘பிரிக்ஸ்முன்னேற்றத்துக்கானதிறன்கள்’, ‘உலகளாவிய மற்றும் நிலையான சமூக பாதுகாப்பு அமைப்புகள்’, ‘பிரிக்ஸ் தொழிலாளர் ஆராய்ச்சி நிறுவனங்கள்’ , ‘பிரிக்ஸ் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்புக் கட்டமைப்பு’, ‘பிரிக்ஸ்தொழில் முனைவோர் ஆராய்ச்சி’.