TNPSC Thervupettagam

பிரிக்ஸ் நாடுகளின் ஐந்து வங்கிகள் கடன்வசதிக்காக ஒப்பந்தம்

September 5 , 2017 2636 days 902 0
  • பிரிக்ஸ் வங்கி ஒத்துழைப்பு நிறுவனத்தின் ஐந்து வங்கிகள் தங்கள் தேசிய நாணயத்தால் கடன்வசதிகளையும், கடன் தரமதிப்பீட்டில் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த சம்மதித்துள்ளன.
  • இந்த ஒப்பந்தம் சீனாவின் ஷியாமென் நகரத்தில் நடைபெற்ற 2017ம் ஆண்டுக்கான பிரிக்ஸின் வருடாந்திர மாநாட்டில் அதன் ஐந்து (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) தலைவர்களால் கையெழுத்திடப்பட்டது.
இதில் கையெழுத்திட்ட ஐந்து வங்கிகள் பின்வருமாறு
  1. பிரேசில் வளர்ச்சி வங்கி (BNDSS)
  2. ரஷ்யாவின் நெஷ்கோனம் வங்கி (Vnesheconom Bank)
  3. இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கி (Export–Import Bank of India – EXIM Bank)
  4. சீன வளர்ச்சி வங்கி (China Development Bank)
  5. தென் ஆப்பிரிக்காவின் வளர்ச்சி வங்கி (DBSA)
கடன் வசதி
  • “Credit Line” என்று அழைக்கப்படும் வங்கியின் கடன் வசதி என்பது அதிகபட்சமான கடன் நிலுவைத் தொகையை கடன் பெறுபவருக்கு கடன் கொடுப்பவர் அளிக்கும் வகையில் ஒரு நிதி நிறுவனம் அல்லது வங்கிக்கும் ஒரு வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்படும் ஒரு ஒப்பந்தமாகும்.
  • கடன் பெற்றவர், ஒப்பந்தத்தில் கூறிய உச்சகட்ட கடன் அளவை பெறாத பட்சத்திலும் ஒழுங்காக தவணைகளை செலுத்திய விதத்திலும் மேற்கொண்டு கடன் பெற முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்