TNPSC Thervupettagam

பிரிக்ஸ் நாடுகளின் நில மறுசீரமைப்பு கூட்டாண்மை 2025

April 24 , 2025 17 hrs 0 min 34 0
  • வேளாண்மை குறித்த பிரிக்ஸ் அமைப்பின் செயற்குழுவின் இரண்டாவதுக் கூட்டம் ஆனது பிரேசிலின் தலைநகரில் நடைபெற்றது.
  • உணவுப் பாதுகாப்பு, நிலையான வேளாண் உற்பத்தி மற்றும் தரமிழந்தப் பகுதிகளின் மறுசீரமைப்பு ஆகிய களங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய முயற்சிகள் குறித்து விவாதிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நிலத் தரமிழப்பு, பாலைவனமாக்கல் மற்றும் மண்வள இழப்பு ஆகிய சிலவற்றினை நிவர்த்தி செய்வதற்காக என அக்குழு "பிரிக்ஸ் நில மறுசீரமைப்பு கூட்டாண்மையை" தொடங்கியுள்ளது.
  • அறிவியல் பூர்வத் தீர்வுகள் மற்றும் சில புதுமையான நிதிசார் செயல்முறைகளின் அடிப்படையில், தரமிழந்த நிலத்தை மீட்டெடுப்பது, மண் வளத்தினைப் பாதுகாப்பது மற்றும் நீர் வளங்களை மிகவும் திறம்படப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.
  • இந்தக் கூட்டாண்மையானது உலகின் தெற்கு (வளரும்) நாடுகளை ஒரு மையமாகக் கொண்டு, நீண்டகால மறுசீரமைப்பு உத்திகளில் அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் உள்ளூர்ச் சமூகங்களை ஈடுபடுத்த முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்