- பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை,
- வங்கிகளுக்கிடையே உள்ளூர் நாணயத்தில் கடன் வசதி ஒப்பந்தம்
- கடனுக்கான தர மதிப்பீடு தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தம்
ஆகியவற்றில் கையெழுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரிக்ஸ் நாடுகளின் வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பங்கேற்போடு இந்த எக்ஸிம் (ஏற்றுமதி – இருக்குமதி வங்கி) வங்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- இந்த இரு ஒப்பந்தங்களும் ஓர் பிணைப்பு தன்மை இல்லா ஒப்பந்தங்களாகும் (Non-Binding in nature).
- எக்ஸிம் வங்கி இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்திற்கு நிதியளித்தல், மேம்படுத்துதல், வசதிபடுத்துதல் / எளிமையாக்கல் (Facilitation) போன்றவற்றை செய்கிறது.
- தொழில் நுட்ப இறக்குமதி, உற்பத்திகளின் ஏற்றுமதி, கடல் தாண்டிய முதலீடு, சரக்கை கப்பலில் ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமான நிலைகளில் ஏற்றுமதிக்கான கடனுதவி, ஏற்றுமதி பொருட்களின் மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய வர்த்தக சுழற்சியின் பல்வேறு நிலைகளில் போட்டித்தன்மையுடனான நிதியளித்தலையும் எக்ஸிம் வங்கி மேற்கொள்கிறது.
வங்கிகளுக்கிடையே உள்ளூர் நாணயத்திலான கடன் வசதி ஒப்பந்தம்
- பிரிக்ஸ் வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு நுட்பத்தின் படி உள்ளூர் நாணயத்தில் கடன் வசதியை விரிவாக்கும் ஆரம்பகட்ட தலைமை ஒப்பந்தம் ஐந்து வருடம் செல்லுபடியாகும் கால அளவைக் கொண்டதாகும்.
- ஏற்றுமதி, இறக்குமதி வங்கி (Exim Bank) பலதரப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் அயல்நாட்டு சந்தைகளில் இருந்து மூலதனத்தை அதிகரிக்கின்றது. மேலும் பண்டமாற்று முறையில் அபாயங்களை தணிக்கிறது.
கடன்வசதி மதிப்பீடு தொடர்பாக ஒத்துழைப்பு உடன்படிக்கை
- இது பிரிக்ஸ் உறுப்பினர்களின் வங்கிகளிடையே கடன்வசதி மதிப்பீட்டை, ஒரு வங்கி மற்றொரு வங்கிக்கு வேண்டுகோள் விடும் பட்சத்தில், பகிர்ந்து கொள்ள உதவும்.
- இது எல்லை தாண்டிய நிதிப்பகிர்வோடு தொடர்புடைய கடன் அபாயங்களை தணிப்பதற்கான சரியான அமைப்பாகும்.