ஜப்பானிய கட்டிடக் கலைஞரான ரிகன் யமமோட்டோ 2024 ஆம் ஆண்டு பிரிட்ஸ்கர் கட்டிடக் கலை பரிசை வென்றுள்ளார்.
இது "கட்டிடக்கலைத் துறையின் நோபல் பரிசு" என்று குறிப்பிடப்படுகின்ற கட்டிடக் கலைத் துறையின் மிக உயர்ந்த சர்வதேச விருது ஆகும்.
1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பரிசு வழங்கப் படுகிறது.
யமமோட்டோ, இந்தப் பரிசினைப் பெற்ற ஒன்பதாவது ஜப்பானிய நாட்டவர் ஆவார்.
இந்த விருது ஆனது, கட்டிடக்கலை மூலம் மனிதகுலம் மற்றும் கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு வழங்கப்படும் நிலையான மற்றும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கிய, திறமை, தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப் படுத்தும் ஒரு கட்டிடக் கலைஞரைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.