பிரிட்டிஷ் நாட்டின் நகர்ப்புறக் கட்டமைப்புத் திட்டமியற்றுநர் மற்றும் ஆர்வலர், சர் டேவிட் ஆலன் சிப்பர்ஃபீல்ட் 2023 ஆம் ஆண்டிற்கான தி பிரிட்ஸ்கர் கட்டிடக் கலைப் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இது கட்டிடக்கலைத் துறையின் மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப் படுகிறது.
40 ஆண்டுகளுக்கும் மேலான சிப்பர்ஃபீல்டின் தொழில்முறை வாழ்க்கையில் பொதுக் கட்டிடம், கலாச்சார மற்றும் கல்விசார் கட்டிடங்கள் என 100க்கும் மேற்பட்டவற்றின் கட்டமைப்பு வரைவுகளை இவர் உருவாக்கியுள்ளார்.