TNPSC Thervupettagam
March 8 , 2019 1971 days 594 0
  • கட்டிடக் கலைஞர்களின் மிகவும் புகழ்பெற்ற விருதான 2019 ஆம் ஆண்டின் பிரிட்ஸ்கர் விருதுக்கு ஜப்பானைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான அராடா இசோசகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பிரிட்ஸ்கர் விருதைப் பெறும் 46 வது வெற்றியாளர் இவராவார். மேலும் இந்த விருதைப் பெறும் 8-வது ஜப்பானிய கட்டிடக் கலைஞர் இவராவார்.
பிரிட்ஸ்கர் விருது
  • பிரிட்ஸ்கர் விருது என்பது தனது திறமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டும் கட்டிடப் பணியை மேற்கொண்டுள்ள வாழும் கட்டிடக் கலைஞர் மற்றும் கட்டிடக் கலைஞர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்படும் ஒரு வருடாந்திர விருதாகும்.
  • இந்த விருதானது 1979 ஆம் ஆண்டில் ஹயட் அறக்கட்டளையின் மூலம் சிகாகோவைச் சேர்ந்த பிரிட்ஸ்கர் குடும்பத்தினால் ஏற்படுத்தப்பட்டது.
  • மேலும் இந்த விருது “கட்டிடக் கலைஞர்களின் நோபல்” மற்றும் “கட்டிடத் தொழிலின் உயரிய விருது” என்றும் அறியப்படுகிறது.
  • சிட்னி ஒபரா ஹவுஸை வடிவமைத்த ஜோர்ன் உட்சன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பால்கிருஷ்ண டோசி ஆகியோர் இதற்கு முன்பு இந்தப் புகழ்பெற்ற விருதைப் பெற்றவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்