ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் இந்தியா தனது இடைமறிப்பு ஏவுகணை சோதனையை இரவில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதன் மூலம் DRDO ஆனது இரண்டு அடுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்குவதில் புதிய மைல் கல்லை அடைந்துள்ளது.
இது இரண்டு நிலையுடைய ஏவுகணையாகும் மற்றும் இரண்டு அடுக்குகளும் திட உந்து எரிபொருளால் இயங்குவதாகும்.
இது பூமியின் வளிமண்டலத்தின் 50 கி.மீ உயரத்தில் வெளிப்புற வளிமண்டல பகுதியில் உள்ள இலக்குகளுக்கு பயன்படுத்துவதற்காக வடிமைக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே உபயோகத்திலிருந்கும் பிரித்வி வான் பாதுகாப்பு (Prithvi Air Defence-PAD)/மேம்பட்ட வான் பாதுகாப்பு (Advanced Air Defence-AAD) கூட்டிணைவிலுள்ள பிரித்வியை மாற்றுவதை நோக்கமாக உடையது.