TNPSC Thervupettagam
February 23 , 2018 2466 days 833 0
  • இந்தியாவின் உள்நாட்டுத் தொழில்நுட்ப தயாரிப்பான, அணு ஆயுதத்தை சுமந்து செல்லத்தக்க பிரித்வி II ஏவுகணை இரவு நேர சோதனையின் போது வெற்றிகரமாக ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • நிலத்திலிருந்து நிலவழி இலக்குகளை (Surface to Surface) தாக்கி அழிக்கவல்ல இந்த ஏவுகணை ஓடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பிலிருந்து நகரும் ஏவுகணை ஏவு அமைப்பின் மூலம் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

பிரித்வி II ஏவுகணையைப் பற்றி

  • பிரித்வி II ஏவுகணை 500 முதல் 1000 கிலோ வரையிலான ஆயுதங்களை சுமந்து செல்ல வல்லது.
  • பிரித்வி ஏவுகணையானது 2003-ல் இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஒற்றை திரவ எரிபொருள் நிலையுடைய (Single Stage Liquid Fuel) பிரித்வி-II ஏவுகணையானது ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (Integrated Guided Missile Development Programme - IGMP) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையாகும்.
  • இது தரையிலிருந்து தரை இலக்கை நோக்கி (surface-to-surface) ஏவக்கூடிய ஏவுகணையாகும்.
  • இந்த ஏவுகணை 350 கி.மீ. இலக்கு வரம்புடையது.
  • திரவ எரிபொருள் உந்துதலை பயன்படுத்தும் இரட்டை எஞ்சின்களின் மூலம் ஆற்றல் பெற்று பிரித்வி-II செயல்படுகின்றது.
  • பிரித்வி ஏவுகணை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் கண்டங்களுக்கிடையேயான (Ballistic) ஏவுகணையாகும்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்நாட்டில் மொத்தம் 5 பிரித்வி ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்