தமண்டுவா மற்றும் பைடா ஆகியோர் வடமேற்குப் பிரேசிலில் உள்ள பிரிப்குரா பழங்குடியினரின் கடைசி மூன்று உறுப்பினர்களில் இரண்டு நபர்கள் ஆவர்.
பிரிப்குரா பூர்வீகப் பிரதேசத்தின் பாதுகாக்கப்பட்ட நிலையானது அமேசான் காட்டில் 243,000 ஹெக்டேர் (600,000 ஏக்கர்) பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பினைக் கொண்டதாகும்.
ஃபுனாய் எனப்படும் பழங்குடி விவகாரங்களுக்கான கூட்டாட்சி நிறுவனம் வழங்கிய வருடாந்திரப் புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டுக் கட்டுப்பாடு ஆணையின் மூலம் இது பராமரிக்கப்படுகிறது.
இன்று 18 சதவீத அமேசான் பகுதியானது அழிந்து விட்டது.
தொடர்பு கொள்ள இயலாத 39 பழங்குடியினர் குறித்தத் தடயங்கள் அல்லது தகவல்கள் உள்ளன.