TNPSC Thervupettagam

பிரியங்கா சோப்ரா - அன்னை தெரசா விருது

December 15 , 2017 2568 days 931 0
  • அகதிகளுக்கு உணவு, உடை மற்றும் கல்வி அளித்து உதவியமைக்காக நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு மனிதநேய செயல்பாடுகளுக்கு ஆதரவளித்து வரும் பிரியங்கா சோப்ரா யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதற்கு முன் சமூக நீதிக்கான அன்னை தெரசா விருது மலாலா யூசுப்சாய், அண்ணா ஹசாரே, கிரண் பேடி, சுஷ்மிதா சென் போன்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
  • பெரும் சமூக சீர்திருத்தவாதியான புனித அன்னை தெரசாவின் நினைவாக அவரை கவுரவிக்கும் விதமாக அவர் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.
  • 2005-இல் ஹார்மோனி பவுண்டேஷனால் இவ்விருது நிறுவப்பட்டது.
  • மும்பையில் ஆப்ரஹாம் மதாய் என்பவர் இந்த அமைப்பை நிறுவினார். அன்றிலிருந்து ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ இவ்விருது வழங்கப்படுகின்றது.
  • அமைதி, சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றிற்கு பங்காற்றும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்