TNPSC Thervupettagam

பிரிஸ்மா செயற்கைக் கோள்

March 24 , 2019 1946 days 585 0
  • இத்தாலி விண்வெளி மையத்திற்காக ஐரோப்பாவின் வேகா விண்கலமானது பிரிஸ்மா (PRISMA) என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளைச் சுற்று வட்டப் பாதைக்குச் சுமந்து சென்றது.

  • பிரிஸ்மா (PRISMA) என்பது பயன்பாட்டுத் திட்டத்தின் உயர் நிறமாலை முன்னோடி என்ற ஒரு இத்தாலிய மொழி விரிவாக்கம் ஆகும்.
  • இந்தச் செயற்கைக் கோளானது சூரிய ஒத்தியக்கச் சுற்று வட்டப்பாதையில் செயல்படும்.
  • சூரியன் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கும் போது இந்த செயற்கைக் கோளானது பூமியின் படங்களை எடுத்து அனுப்புவதற்கு உதவும் முறையில் இது பூமியைச் சுற்றி வரும்.
  • வளிமண்டலம், உயிர்க்கோளம் மற்றும் நீரோட்டம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு, உலகளாவிய தட்பவெப்ப நிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் அமைப்புகளில் மனித நடவடிக்கைகளின் விளைவுகள் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு மேற்கொள்வது PRISMA –ன் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்