TNPSC Thervupettagam
January 14 , 2023 555 days 405 0
  • இந்திய நாடானது பிரித்வி-II எனப்படும் தனது உத்திசார் உந்துவிசை ஏவுகணையின் சோதனையினை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இது கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய அணுசக்தி திறன் கொண்ட கொண்ட குறுகிய தூர வரம்புடைய உந்துவிசை ஏவுகணையாகும்.
  • இது ஒற்றை நிலை கொண்ட திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணையாகும்.
  • பிரித்வி-II ஏவுகணையானது சுமார் 350 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்துத் தாக்கும் திறன் கொண்டது.
  • இது சுமார் 250 கிலோமீட்டர் முதல் 350 கிலோமீட்டர் தூரம் வரை பாயக்கூடிய மற்றும் ஒரு டன் எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் (DRDO) அதன் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் (IGMDP) கீழ் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்