TNPSC Thervupettagam

பிரெக்ஸிட் சட்டத்திற்கு ஒப்புதல்

January 25 , 2020 1674 days 689 0
  • இங்கிலாந்து பாராளுமன்றமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதியன்று பிரெக்ஸிட் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இறுதியாக ஜனவரி 31 ஆம் தேதியன்று 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து நாடு விலகுவதற்கான விதிமுறைகளை அது ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இரண்டாம் எலிசபெத் ராணி 2020 ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று பிரெக்சிட் சட்டத்திற்கு தனது அரச முறையிலான ஒப்புதலை வழங்கினார். இந்த ஒப்புதலானது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து சீராக வெளியேற வழி வகுக்கும்.
  • இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒரு மிகப்பெரிய அமைப்பை விட்டு வெளியேறுகின்ற முதல் தேசமாக இங்கிலாந்து மாறுகின்றது.
  • 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று நடைபெற்ற வரலாற்றும் முக்கியம் வாய்ந்த வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு இங்கிலாந்து மக்கள் வாக்களித்திருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்