TNPSC Thervupettagam

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி – 2021

June 17 , 2021 1258 days 648 0
  • 125வது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2021 போட்டியானது பிரான்சின் பாரீசிலுள்ள ஸ்டேட் ரோலண்ட் கரோஸ் என்ற அரங்கில் நடைபெற்றது.
  • இது 2021 ஆம் ஆண்டின் 2வது கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும்.
  • இது களிமண் தளத்தில் நடைபெறும் ஒரு போட்டியாகும்.
  • இது சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பினால் (International Tennis Federation) ஏற்பாடு செய்யப் படுகிறது.
  • நோவாக் ஜோகோவிக் (செர்பியா) அவர்கள் ஸ்டெஃபனோஸ் சிட்ஸிபாசை (கிரேக்கம்) தோற்கடித்து ஆடவர் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றார்.
  • பார்போரா கிரெஜிகோவா (செக் குடியரசு) என்பவர் அனஸ்தாசியா பவிலியுன்செங்கோவாவை (ரஷ்யா) தோற்கடித்து மகளிர் ஒற்றையர் போட்டியில் பட்டம் வென்றார்.
  • இது இவருடைய முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
  • பார்போரா அவருடைய சக ஆட்டக்காரர் கேடெர்லினா சினியாகோவாவுடன் (செக் குடியரசு) இணைந்து பெத்தனி மட்டெக் சான்ட்ஸ் (அமெரிக்கா) மற்றும் இகா ஸ்வெய்டெக் (போலெந்து) ஆகியோரைத் தோற்கடித்து மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றனர்.
  • 2000 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பிரஞ்சு ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற ஒரே வீராங்கனை பார்போரா கிரெஜிகோவா ஆவார்.
  • பிரெஞ்சு நாட்டு இணை வீரர்களான பியர்ஹியூஸ் ஹெர்பர்ட் மற்றும் நிகோலா மஹீத் ஆகியோர் 2021 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் பிரெஞ்சு நாட்டு இணை (ஜோடி) ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்