TNPSC Thervupettagam
June 11 , 2019 1867 days 675 0
  • 2019 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபனின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்லே பார்டியும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடாலும் வெற்றி பெற்றுள்ளனர்.
  • ரபேல் நடால் 12 வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
  • ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஜெர்மனியைச் சேர்ந்த கெவின் கிராவெய்ட்ஸ் மற்றும் ஆண்டிரியாஸ் மியஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
  • பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஹங்கேரியைச் சேர்ந்த டைமா பாபோஸ் மற்றும் பிரெஞ்சைச் சேர்ந்த கிறிஸ்டினா மிலாடெனோவிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இப்போட்டியைப் பற்றி
  • பிரெஞ்சு ஓபன் போட்டியின் 123-வது பதிப்பு பாரிஸில் உள்ள ரோலாண்டு கேரோஸில் நடத்தப்பட்டது.
  • இது ஆண்டின் இரண்டாவது டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும்.
  • இது வெளியரங்கில் களிமண் தரையில் விளையாடப்படுகின்றது.
  • ஆஸ்திரேலியன் ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகியவை ஆண்டின் இதர கிராண்ட் ஸ்லாம் போட்டிகளாகும்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான இதன் இதர நிகழ்வுகள் மற்றும் வெற்றியாளர்கள் பின்வருமாறு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்