செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட் என்பவரை வீழ்த்தியதன் மூலம் தனது 23வது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தினை வென்றார்.
ஆடவர் டென்னிஸ் போட்டியின் வரலாற்றில் மிக அதிக ஒற்றையர் கோப்பைகளை வென்ற ரஃபேல் நடாலுடனான சமனை இவர் முறியடித்தார்.
நான்கு மேஜர் பட்டங்களில் குறைந்தது மூன்று முறையாவது வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றார்.
பிரெஞ்சு ஓபன் போட்டியானது நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றாகும் என்பதோடு இது 1891 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது.