ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு விளையாட்டு வீரர் கார்லோஸ் அல்கராஸ் தனது முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.
ஓபன் போட்டிகளின் சகாப்தத்தில் கடின தள மைதானம், களிமண் மற்றும் புல் தள மைதானம் ஆகிய மூன்று பரப்புகளிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற மாபெரும் சாதனையை எட்டிய இளம் நபர் என்ற பெருமையினை இவர் பெற்றுள்ளார்.
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக் மீண்டும் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தினார்.