TNPSC Thervupettagam

பிரேசிலின் அமேசானில் காடழிப்பு

November 13 , 2024 9 days 65 0
  • பிரேசிலின் அமேசான் பகுதியின் வன இழப்பு ஆனது, முந்தைய ஆண்டை விட 30.6% குறைந்துள்ளது.
  • 12 மாத கால இடைவெளியில், அமேசான் மழைக் காடுகள் 6,288 சதுர கிலோமீட்டர் (2,428 சதுர மைல்) பரப்பினை இழந்துள்ளது.
  • செராடோ என்று அழைக்கப்படும் பிரேசிலின் பரந்து விரிந்த சவன்னா புல்வெளி பரப்பில் காடழிப்பு ஆனது 25.7% குறைந்துள்ளது என்ற நிலையில் இது கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான முதல் சரிவு ஆகும்.
  • அழிக்கப் பட்ட பகுதியின் அளவானது, 8,174 சதுர கிலோமீட்டர் (3,156 சதுர மைல்) என்ற அளவினை எட்டியுள்ளது.
  • இந்தியாவை விட இரண்டு மடங்கு பெரிய பரப்பளவிலான அமேசான் பகுதி, உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளைக் கொண்டுள்ளது என்ற நிலையில் அதில் மூன்றில் இரண்டு பங்கு பிரேசிலில் அமைந்துள்ளது.
  • அமேசான் நதிப் படுகையானது உலகின் 20% நன்னீர் மற்றும் 16,000 அறியப்பட்ட மர இனங்கள் உள்ளிட்ட பல்லுயிர்ப் பெருக்கத்தினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்