TNPSC Thervupettagam

பிரைட்ஸ்கர் பரிசு- பால்கிருஷ்ண வித்தல்தாஸ் தோஷி

March 8 , 2018 2356 days 760 0
  • கட்டிடக்கலையின் நோபல் பரிசு (Architecture Nobel) என்றழைக்கப்படும் பிரைட்ஸ்கர் பரிசினை (Pritzker Prize) வென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை கட்டிடக்கலை வல்லுனரான பால்கிருஷ்ண வித்தல்தாஸ்  தோஷி அடைந்துள்ளார்.

  • குறிப்பிடத்தகு சாதனை புரிந்தமைக்காக ஆண்டுதோறும், உயிருடன் இருக்கும் கட்டிடக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓர் சர்வதேசப் பரிசே பிரைட்ஸ்கர் பரிசாகும்.
  • இந்தப் பரிசை 1979-ஆம் ஆண்டு தங்களுடைய ஹையாட் பவுண்டேஷன் (Hyaat Foundation) மூலம் சிகாகோவின் பிரைட்ஸ்கெர் குடும்பம் தோற்றுவித்தது.
  • இப்பரிசினை வெல்பவருக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டாலருடன் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும்.
  • குறைந்த விலையிலான வீடுகள் வடிவமைப்பில் முன்னோடியான பால்கிருஷ்ண வித்தல்தாஸ்  தோஷி, பாரம்பரிய கட்டிடக் கலையில் வேரூன்றி நிற்கும் நம் நாட்டிற்கு நவீன வடிவமைப்பைக் கொண்டு வந்து  நீடித்த கட்டிடக்கலைக்காக பணியாற்றி வருகிறார்.
  • அஹமதாபாத்தில் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஹௌசிங், ஜெய்ப்பூரிலுள்ள வித்யாதர் நகர், இந்தூரிலுள்ள ஆரண்யா குறைந்த விலையிலான வீடுகள் (Aranya Low Cost Housing)  ஆகியவை இவரின் குறிப்பிடத்தக்கப் பணிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்